For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை உள்பட 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்கள்- அரசாணை வெளியீடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை உள்பட 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், வேலூர், கோவை, தஞ்சை சேலம் உள்ளிட்ட ஆறு மாநகராட்சிகளின் மேயர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பதவிகளுக்கு எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விருப்பமனுக்களை பெற்று வருகின்றனர். எந்த வார்டு யாருக்கு எந்த நகராட்சி யாருக்கு என்பது பற்றிய அரசாணை வெளியாகாமல் இருந்த காரணத்தால் விருப்பமனு அளிப்பதில் சுணக்கம் நிலவுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று அரசாணை வெளியாகியுள்ளது.

Chennai to have a woman Mayor

பெண்களுக்கு 6 மேயர் பதவிகள்

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மொத்தமுள்ள 12 மாநகராட்சிகளில் 6 மாநகராட்சிகளின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை, திண்டுக்கல், வேலூர், கோயம்பத்தூர் தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவினருக் கும் ஒதுக்கப்பட்ட நகராட்சிகள் பட்டியல் விவரம்:

எஸ்.சி. (பொது):நெல்லிக் குப்பம், அரக்கோணம், நெல்லியாலம், ஆத்தூர், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தாநல்லூர், மறைமலை நகர்.
எஸ்.சி. பெண்கள்:ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, வால் பாறை, ஊட்டி, சங்கரன் கோவில், பேரணாம்பட்டு, குன்னூர், பெரம்பலூர்.
எஸ்.டி. பெண்கள்:கூடலூர்.

பெண்கள் (பொது):ஆம்பூர், குடியாத்தம், திருவத்தி புரம், வந்தவாசி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண் யம், அறந்தாங்கி, ஜெயங் கொண்டம், தேவக்கோட்டை, காரைக்குடி, கீழக்கரை, தாராபுரம், உடுமலை பேட்டை, கடையநல்லூர், தென்காசி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கோவில்பட்டி, காயல் பட்டினம், குழித்துறை, நாகர்கோவில், பத்மநாப புரம், சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், ராசிபுரம், திருவாரூர், செங்கோட்டை, துறையூர். வாலாஜாபேட்டை, கடலூர், பழனி, வாணியம் பாடி, மேட்டுப்பாளையம், செங்கல்பட்டு, மதுராந்தகம், போடிநாயக்கனூர், குளித் தலை, மேட்டூர், கிருஷ்ணகிரி, அரியலூர், ராஜபாளையம், ஆற்காடு, அருப்புக்கோட்டை, திருமங்கலம், பெரியகுளம், தர்மபுரி, பொள்ளாச்சி, விழுப்புரம், கம்பம்.
பொது பட்டியல்: தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், காஞ்சீபுரம். பெண்கள்:செங்கல்பட்டு, மதுராந்தகம். எஸ்.சி. பொது: மறைமலைநகர்.

மாவட்ட பஞ்சாயத்து

பொது: திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி.
எஸ்.டி. பெண்கள்: நாமக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி.
எஸ்.டி. (பொது): நீலகிரி, தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்.
பெண்கள் (பொது):காஞ்சீபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுக் கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி.

English summary
Tamil Nadu govt has allotted Chennai and 5 other corporations to Women category.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X