For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெடுஞ்சாலையிலிருந்து கிராமத்துக்கு ஷிப்ட்டான 10 மதுக்கடைகளை திறக்க ஹைகோர்ட் தடை

நெடுஞ்சாலைகளிலிருந்து கிராமங்களுக்கு ஷிப்படாக உள்ள 10 மதுக்கடைகளை திறப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நெடுஞ்சாலைகளிலிருந்து கிராமங்களுக்கு ஷிப்படாக உள்ள 10 மதுக்கடைகளை திறப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏராளமான விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

Chennai HC bans 10 TASMAC shops which are going to open

இதுமட்டுமல்லாமல் சமூக பிரச்சினை காரணமாகவும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3,500-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டன.

டாஸ்மாக் கடை ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாலும் கடைகளில் உள்ள சரக்குகளை குடிமகன்கள் உடைத்து களவாட வாய்ப்பிருப்பதாகவும் கருதி உடனடியாக ஊருக்குள் கடைகளை திறக்க இடம் பார்த்து வந்தனர். இதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பி, கடப்பாரை கொண்டு பெண்களே கடைகளை உடைத்து தள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராம மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கானது நீதிபதி கருணாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், நெடு்சாலைகளிலிருந்து மதுபானக் கடைகளை அகற்ற உத்தரவிட்டதும், கிராமங்களில் கடை வைக்க ஊழியர்கள் இடம் தேர்வு செய்து வருவது கண்டிக்கத்தக்கது. மேலும் சேலம் மாவட்டம், எடப்பாடி உள்ளிட்ட 10 இடங்களுக்கு மாற்றப்படவுள்ள 10 மதுபானக் கடைகளை திறக்க தடை விதிக்கப்படுகிறது என்றார் அவர்.

English summary
TASMAC staffs are going to open shops in 10 villages including Edappadi. To ban this Ariyalur Dist people filed plea in Chennai HC. Judge ordered that the 10 liquor shops should not be opened in the proposed place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X