For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸாரை தாக்கிய ரவுடியைச் சந்தித்த அமைச்சர் மணிகண்டன்.. நீதிபதி கிருபாகரன் கண்டனம்

போலீஸாரை தாக்கிய ரவுடியைச் சந்தித்த அமைச்சர் மணிகண்டனுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    ரவுடியை சந்தித்த அமைச்சருக்கு உயர்நீதி மன்றம் கண்டனம்- வீடியோ

    சென்னை : போலீஸாரை தாக்கிய ரவுடி கொக்கிகுமாரைச் சந்தித்த அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரத்தில் போலீஸ் எஸ் ஐ ஒருவரை தாக்க முயன்று காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொக்கிகுமார் என்கிற ரவுடியை கடந்த 12ம் தேதி அமைச்சர் மணிகண்டன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    Chennai HC Condemns Minister Manikandan

    இந்தப் புகைப்படங்கள் வாட்ஸ் அப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், காவல்துறையினரை தாக்கிய ரவுடியை சந்தித்தத அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஆர்டர்லி முறை குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார். மேலும், காவலரைத் தாக்கிய ரவுடியை சந்தித்தால் காவல்துறையின் மாண்பு குறையாதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ரவுடியை அமைச்சர் பார்ப்பது காவல்துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ராமநாதபுரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Chennai HC Condemns Minister Manikandan. Earlier Minister Manikandan who visited Hospital and met two Rowdies who are responsible for the attack of policeman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X