For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 65 பேருக்கும் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.

Chennai HC denies to cancel the Bail for Thoothukudi Protest arrests

அந்த துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட வன்முறையின் போது, 65 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 65 பேரையும் சொந்த ஜாமீனில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாருஹாசினி விடுவித்தார்.

இதனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 65 பேரிடமும் மாவட்ட நீதிமன்ற நடுவர் பதிவு செய்த வாக்குமூலத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

English summary
Chennai HC denies to cancel the Bail for Thoothukudi Protest arrests . Earlier 65 people were arrested by the police on Thookudi Sterlite Protest Firing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X