For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது.. மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விருது வழங்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விருது வழங்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

Chennai High court dismissed the petition of demanding Bharat Ratna for Jayalalitha

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு சிலை வைக்க வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரமேஷ் என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி பொதுநலன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. விருது வழங்க ஹைகோர்ட் உத்தரவிட முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

English summary
Chennai High court dismissed the petition of demanding Bharat Ratna for former Chief minister Jayalalitha. The court said that, court can't order to offer awards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X