For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. உடல் தோண்டி எடுக்கப்படுமா.. 2வது முறையாக கேள்வி எழுப்பிய நீதிபதி வைத்தியநாதன்!

ஜெயலலிதாவின் உடலை ஏன் தோண்டி எடுக்கக் கூடாது என்று 2-ஆவது முறையாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ. உடலை எடுத்து டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் என்ன..வீடியோ

    சென்னை: ஜெயலலிதாவின் உடலை ஏன் தோண்டி எடுக்கக் கூடாது என்று 2-ஆவது முறையாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் எழுப்பியுள்ளார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நல குறைவால் மரணமடைந்துவிட்டார். ஜெயலலிதாதான் தனது தாய் என்று உரிமை கோரி பெங்களூரைச் சேர்ந்த அம்ருத்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்து கொள்ள அம்ருத்தாவுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    அம்ருத்தா வழக்கு

    அம்ருத்தா வழக்கு

    இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருத்தா, ஜெ.வின் உறவினர்கள் லலிதா, ரஞ்சனி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது.

    ஏன் தோண்டக் கூடாது

    ஏன் தோண்டக் கூடாது

    அப்போது நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து
    ஏன் டிஎன்ஏ பரிசோதனை செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞரோ இதுபோல் உடலை தோண்டி எடுக்க அனுமதித்தால் இன்னும் 1000 பேர் வருவர் என்றார்.

    ஏற்கெனவே கோரிக்கை

    ஏற்கெனவே கோரிக்கை

    ஜெயலலிதாவின் உடலை ஏன் தோண்டி எடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய எஸ்.வைத்தியநாதன் ஏற்கெனவே இதுபோன்ற ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் என்பவர் வழக்கு பதிவு செய்தார். அப்போது சென்னை ஹைகோர்ட்டின் விடுமுறைகால நீதிபதியாக இருந்த எஸ்.வைத்தியநாதன், எனக்கு ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது.

    உத்தரவிடுவேன்

    உத்தரவிடுவேன்

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கும் வழக்கை நான் விசாரித்திருந்தால் அவரது உடலை தோண்டி எடுக்கக் கூறியிருப்பேன் என்று தெரிவித்து தமிழகத்தை பரபரப்பாக்கினார். இந்நிலையில் தற்போது அவர் 2-ஆவது முறையாக அதே கேள்வியை எழுப்பியுள்ளதால் ஜெயலலிதாவின் உடல் தோண்டி எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வருகிறது.

    English summary
    Bengalore Amrutha files plea and claims to announce her to be heir of Jayalalitha. Chennai HC Judge Vaidyanathan asks for taking the body of Jayalalitha from the memorial. He asked this for second time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X