For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை ஈசிஆர் சாலையில் அனுமதி மீறி கட்டடம்: கமல் உள்பட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப ஹைகோர்ட் உத்தரவு

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் அனுமதி மீறி கட்டடங்கள் கட்டியதாக கமல்ஹாசன் உள்ளிட்ட 138 பேருக்கு நோட்டீஸ் வழங்குமாறு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஈசிஆர் சாலையில் சொகுசு பங்களா கட்ட ரங்கநாதன் என்பவர் மாநகராட்சியிடம் அனுமதி கோரினார். அப்போது மாநகராட்சி அனுமதிக்க வழங்கவில்லை.

Chennai HC orders to give notice to Kamal hassan

இதை எதிர்த்து ரங்கநாதன் ஹைகோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார். அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை ஈசிஆரில் விதிகளை மீறி கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட 138 பேருக்கு கட்டடங்கள் கட்டப்பட அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. அந்த கட்டடங்களின் ஆவணங்களை பார்த்த போது அவை அனுமதி மீறி கட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மாநகராட்சிக்கும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுவுக்கும் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

English summary
Chennai HC orders to issue notice to Kamal hassan for violating CMDA rules and built a luxury house in ECR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X