For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2016-இல் பெரம்பூர் சட்டசபை தொகுதியில் வெற்றிவேல் பெற்ற வெற்றி செல்லும்- ஹைகோர்ட்

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரம்பூரில் போட்டியிட்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற வெற்றிவேலின் வெற்றி செல்லும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 2016 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரம்பூரில் போட்டியிட்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற வெற்றிவேலின் வெற்றி செல்லும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் அந்த வெற்றியை எதிர்த்து தொடுத்த வழக்கையும் நிராகரித்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் பெரம்பூர் தொகுதியில் வெற்றிவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட என்.ஆர். தனபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரர்ந்தார்.

Chennai HC says that Vetrivel's victory is valid in 2016 Assembly elections

மேலும் பணம் , அதிகார பலத்தை வைத்து பெற்ற வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் தனபாலனின் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் 2016-இல் பெரம்பூர் சட்டசபை தொகுதியில் வெற்றிவேல் பெற்ற பெற்றி செல்லும் என்றும் அறிவித்தது.

அதிமுகவின் கொறடாவுக்கு எதிராக செயல்பட்டதாக சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் வெற்றிவேலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai HC says that Vetrivel's victory is valid in 2016 Assembly elections. It also rejected the plea against Vetrivel's victory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X