நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை ஹைகோர்ட்!

சென்னை: வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
பணத்தகராறில் பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்த் மற்றும் காண்ட்ராக்டர் சண்முகம் சுந்தரம் ஆகியோரை நடிகர் சந்தானம் தாக்கினார். இதுதொடர்பாக அவர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கைது நடவடிக்கை பயந்து நடிகர் சந்தானம் தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் சந்தானத்துக்கு ஹைகோர்ட் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. நடிகர் சந்தானம் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி 2 வாரத்துக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.