For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துணை முதல்வர் பதவியா.. அது அரசியல் சாசனத்திலேயே கிடையாதே.. ஓபிஎஸ் பற்றி ஹைகோர்ட் கருத்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    துணை முதல்வர் என்ற பதவியே அரசியல் சாசனத்தில் கிடையாதே ? உயர்நீதிமன்றம் கருத்து

    சென்னை: துணை முதல்வர் பதவி என்பது அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவி கிடையாது என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், செம்மலை, க.பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ. க்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா அர.சக்கரபாணி வழக்கு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், 2017 பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அரசுக்கு எதிராக இவர்கள் வாக்களித்தனர்.

    கபில் சிபல் வாதம்

    கபில் சிபல் வாதம்

    எதிர்த்து வாக்களித்த இவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இன்று ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் விசாரணை நடைபெற்றபோது, திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.

    சரமாரி குற்றச்சாட்டு

    சரமாரி குற்றச்சாட்டு

    அப்போது எதிர்த்து வாக்களித்த பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமாக செயல்படும் அரசு என சரமாரியாக குற்றம்சாட்டினார்.

    குட்டுவைத்த நீதிபதி

    குட்டுவைத்த நீதிபதி

    அப்போது, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில், துணை முதல்வர் பதவி என்பது அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவி கிடையாது என்பதை சுட்டிக் காட்டினார்.

    கவுரவம், கவுரவம்னு

    கவுரவம், கவுரவம்னு

    எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் இருப்பதால் கவுரவத்திற்காக துணை முதல்வர் பதவியை விரும்பி பெற்றுள்ளது ஓபிஎஸ் தரப்பு என கூறப்படுகிறது. ஆனால், அரசியல் சாசனத்தில் அப்படி ஒரு பதவியே வரையறுக்கப்படவில்லை. அதுவும் ஒரு அமைச்சர் பதவிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chennai High Court Chief Judge Indira Banerjee said that the deputy chief minister post is not authorized by the Indian constitution.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X