For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது: நாடு முழுவதும் விளம்பரம் செய்ய சிபிஎஸ்இக்கு ஹைகோர்ட் உத்தரவு

2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்பதை நாடு முழுவதும் விளம்பரம் செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: 2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்பதை நாடு முழுவதும் விளம்பரம் செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பாடச்சுமையை குறைக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Chennai High Court ordered the CBSE to advertisements across the country

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த சென்னைஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவில் கண்டிப்பு காட்ட வேண்டும் என்றார்.

2ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கூடாது என்பதை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் கூறினார்.

மேலும் 2 ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் நடிகர்கள் சல்மான்கான், ரஜினி காந்த்,நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து கேட்கப்பட்டது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.

நடிகர்கள் நடிகைகளை வைத்து கேள்வி கேட்கும் அளவுக்கு சிபிஎஸ்இயின் தரம் குறைந்துவிட்டதா என்றும், நாட்டின் முதன்மையான கல்வியானத்திற்கு இதுபோன்ற கேள்விகள் தேவையா என்றும் நீதிபதி கிருபாகரன் விளாசினார். மேலும் வழக்கறிஞர் புருஷோத்தமன் தொடர்ந்த வழக்கு விசாரணையை நீதிபதி நாளைக்கு ஒத்திவைத்தார்.

English summary
The Chennai High Court has ordered the CBSE to advertisements across the country to do not provide homework to Class II.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X