For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரேக்ளா பந்தயத்திற்கு தடை கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ரேக்ளா பந்தயத்திற்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் ரேக்ளா எனும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் நடக்கும் ரேக்ளா எனும் மாட்டு வண்டி பந்தயத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மத்திய அரசின் கடந்த 2014 ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்படி ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

Chennai High Court orders on Rekla Race ban in Tamilnadu

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்திற்கு பிறகு, ஜல்லிக்கட்டு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம், ரேக்ளா பந்தயம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இதற்கு நிரந்த தர விதிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அந்த மனுவில், ஜல்லிக்கட்டு போல ரேக்ளா பாரம்பரிய விளையாட்டு இல்லை என்றும், அதில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், மத்திய அரசின் விலங்கு வதை தடுப்பு சட்டத்திற்கு எதிரான இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து இதில் தாங்கள் தலையிட முடியாது என்று சொல்லி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. மேலும், மனுதாரர் உச்சநீதிமன்றத்தை அணுகவும் அறிவுறுத்தி உள்ளது.

English summary
Chennai High Court orders on Rekla Race ban in Tamilnadu .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X