For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா கணவர் நடராஜன் மீதான சொகுசுக் கார் வரி ஏய்ப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

சசிகலா கணவர் மீதான நடராஜன் மீதான சொகுசுக் கார் வரி ஏய்ப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா கணவர் மீதான நடராஜன் மீதான சொகுசுக் கார் வரி ஏய்ப்பு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சசிகலாவின் கணவர் ம.நடராஜன் 1994ல் லெக்சஸ் மாடல் காரை வாங்கியுள்ளார். அப்போது அதற்கான வரியை செலுத்தாமல் வரிஏய்ப்பு செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

Chennai high court postponed Natarajan's luxury car tax evasion case judgement

ஒரு கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடராஜன் உள்பட நால்வருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2010ம் ஆண்டு சி.பி.ஐ கோர்ட் தண்டனை தீர்ப்பளித்தது. சி.பி.ஐ கோர்ட் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர்

அதில் விசாரணை நீதிமன்றம் தங்களின் தரப்பு வாதத்தை முழுமையாக ஏற்காமல் சிறை தண்டனை விதித்துள்ளதாகவும், எனவே விசாரணை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் அமர்வில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதி ஜெயசந்திரன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

English summary
Sasikala husband Natarajan's luxury car tax evasion case judgement has been postponed.Trial held in Chennai high court toda
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X