For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈஷா மையத்திற்கு எதிரான வழக்கு: அரசு பதிலளிக்க ஜூன் 8ஆம் தேதி வரை அவகாசம்!

வனப்பகுதிகளை சூறையாடி ஈஷா மையம் கட்டடங்களை கட்டியதாக வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் தொடர்ந்த வழக்கு ஜூன் 8ஆம் தேதி வரை அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வனப்பகுதிகளை சூறையாடி ஈஷா மையம் கட்டடங்களை கட்டியதாக வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் தொடர்ந்த வழக்கு ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதில் வெள்ளியங்கிரி மலையில் 112 அடி ஆதியோகி சிவன் சிலை அமைப்பதற்காக வனப்பகுதியில் நிலம் சட்டவிரோதமாக ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது.

Chennai high court postponed the case against Isha on 8th May

அந்த நிலத்தில் எவ்வித அனுமதியுமின்றி கட்டு மானங்கள் கட்டப்படுகின்றன. எனவே புதிதாக கட்டுமானங்கள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண் டும். அத்துடன், ஏற்கெனவே அத்து மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க உத்தரவிட வேண்டும் கோரியிருந்தனர்.

இதற்கு கோவை மண்டல நகரமைப்பு திட்டமிடல் துறை மட்டும் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவை மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் பிற துறைகள் மற்றும் ஈஷா மையம் ஆகியவை இன்னும் பதிலளிக்கவில்லை.

எனவே ஈஷா மையம் உள்ளிட்ட பிற எதிர்மனுதாரர்களும் பதிலளிக்கும் வகையில் விசாரணையை தள்ளி வைப்பதாக கூறிய ஹைகோர்ட் அதற்குள் மத்திய, மாநில அரசுகள் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வெள்ளிங்கிரி பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் புருசோத்தமன், வழக்கறிஞர் கலையரசன், வழக்கறிஞர் பன்னீர் செல்வம் ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணையின் போது அரசு தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்டதால் ஜூன் 8ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஈஷா மையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 112அடி உயர ஆதியோகி சிலையியை பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்க்கக்கது.

English summary
Tribal Velliangiri case has been postponed to June 8th against Isha Center for looting the forest and the buildings constructed. If the prosecution requested more time to respond Madras High Court postpones trial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X