For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்எல்ஏக்களை மீட்கக்கோரிய டிராபிக் வழக்கு... அவசர வழக்காக விசாரிக்க ஹைகோர்ட் மறுப்பு

சசிலா பிடியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்களை மீட்கக்கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக எம்எல்ஏக்களை மீட்கக்கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. வழக்கு பட்டியலுக்கு வந்த பிறகே விசாரிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணி என பிரிந்துள்ளது. இதில் ஓபிஎஸ்க்கு மக்களிடையே பெரும் ஆதரவு உள்ளது.

Chennai high court refused to hear the case of traffic ramaswamy immediately

இதனால் பீதியடைந்த சசிகலா அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்களை கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளார். இந்நிலையில் சசிகலா பிடியில் உள்ள எம்எல்ஏக்களை மீட்கக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் டிராபிக் ராமசாமியின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. வழக்கு பட்டியலுக்கு வந்த பிறகே விசாரணை நடத்தப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

English summary
Traffic Ramasamy filed a case to recover the ADMK MLAs in Madras High Court. The court has refused to hear that case immediately. The case was heard before the Madras High Court, according to the list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X