For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரின் பி படிவத்தில் இருப்பது ஜெ. கைரேகையா? ஹைகோர்ட் நீதிபதி கேள்வி

திருப்பரங்குன்றம் தேர்தல் அதிமுக வேட்பாளரின் பி படிவத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் கைரேகை உண்மையானதா என ஹைகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ருப்பரங்குன்றம் தேர்தல் அதிமுக வேட்பாளரின் பி படிவத்தில் இருப்பது ஜெயலலிதாவின் கைரேகை உண்மையானதா என ஹைகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனால் திருப்பரங்குன்றம் வேட்பாளரின் தேர்தல் ஆணைய பி படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை இடம்பெற்றிருந்தது. ஜெயலலிதாவின் கைரேகை இடம்பெற்றதால் அவருக்கு என்ன ஆனதோ என பரபரப்பு ஏற்பட்டது.

Chennai high court seeks Election commission Chief secretary's explanation on the Jayalalitha finger print issue

இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் கை வீக்கமாக உள்ளது. இதனால் அவரால் பேனா பிடித்து கையெழுத்து போட முடியாத நிலை உள்ளதால் கைரேகை வாங்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்து சரவணன் தேர்தல் ஆணைய பி படிவத்தில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதாவின் கையெழுத்து குறித்து வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி படிவத்தில் உள்ள ஜெயலலிதா கைரேகை உண்மையா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அக்டோபர் 6ம் தேதி முதன்மை செயலாளர் வில்ஃபர்டு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Chennai high court seeks Election commission Chief secretary's explanation on the Jayalalitha finger print issue.Jayalalitha finger print placed in the Election commission B form.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X