For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கந்தன்சாவடியில் கட்டடம் சரிந்து விபத்து... பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு

சென்னை கந்தன்சாவடியில் நடந்த கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை கந்தன்சாவடியில் கட்டடம் சரிந்து விபத்து. பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு.

    சென்னை: சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனைக்கான கட்டடம் சரிந்த விபத்தில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

    சென்னை கந்தன்சாவடியில் உள்ள 4 மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இது தனியார் மருத்துவமனை கட்டட பணிக்கானது. இதில் பெரும்பாலானோர் வடமாநிலங்களில் பணியாற்றி வந்தனர்.

    நேற்றுமுன்தினம் மாலை தொழிலாளர்கள் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாரம் தாங்காமல் கட்டடத்தின் இரும்பு சாரம் சரிந்து விழுந்தது.

    தொழிலாளர்கள்

    தொழிலாளர்கள்

    சிறிது நேரத்திற்கெல்லாம் கட்டடம் மளமளவென இடிந்து விழுந்தது. கூடவே கான்கிரீட் போடும் இரும்புக் கம்பிகளும் விழுந்தன. இந்த இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

    மீட்பு பணி

    மீட்பு பணி

    இந்த சம்பவத்தில் 27 பேர் மீட்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்தவர்களில் 5 பேர் நிலைமை மோசமாக உள்ளது. அதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பப்லு என்பவர் உயிரிழந்தார். கட்டட விபத்து தொடர்பாக கட்டட பொறியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். மீட்பு பணிகள் மேலும் நடைபெற்று வருகிறது.

    இருவர் கைது

    இருவர் கைது

    இந்த கட்டடம் சரிந்து விழுந்த விபத்துக்கு காரணம் ஆலோபிரிக்ஸால் கட்டடம் கட்டப்பட்டதுதான் என்று கூறப்படுகிறது. பொதுவாக செங்கற்களால்தான் கட்டடங்கள் கட்டப்படுவது வழக்கம். ஆனால் விலை குறைவாக உள்ள ஹாலோ பிரிக்ஸை கட்டடம் கட்ட பயன்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கட்டட பொறியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

    ராஜன்சவுத்ரி

    ராஜன்சவுத்ரி

    இந்த விபத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ராஜன்சவுத்ரி என்பவர் சிகிச்சை பலினின்றி பலியானார்.

    English summary
    Private hospital which was being built in Chennai Knathanchavadi collapsed the day before yesterday. The death toll increases to 2.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X