For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்னியாகுமரி- சென்னை இடையே பயணிகள் கப்பல் இயக்குவது குறித்து ஆய்வு!

கன்னியாகுமரி- சென்னை இடையே பயணிகள் கப்பல் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருந்து சென்னை இடையே கப்பல் போக்குவரத்து அமைப்பதற்கான சாத்தியங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி கன்னியாகுமரிக்கு வந்த அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

Chennai - Kanyakumari study on passenger ship, says Minister Vellamandi Natarajan

அப்போது அவர் கூறுகையில், திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடலில் நிகழும் மாற்றங்களால் இதுபோல் ரத்து செய்யப்படுகிறது. விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.15 கோடியில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதி மற்றும் மாநில அரசின் பங்களிப்போடு இந்த திட்டம் நிறைவேற்றப்படும். கன்னியாகுமரி-சென்னை இடையே கடல் வழி போக்குவரத்து தொடங்குவதற்கான சாத்தியங்கள் குறித்தும், அந்த வழித்தடத்தில் பயணிகள் கப்பல் இயக்குவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

English summary
Minister Vellamandi Natarajan says, there is a study about Chennai - Kanyakumari passenger ship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X