For Daily Alerts
சென்னை கே.கே நகர் சரவணபவன் உணவகத்திற்கு சீல்- சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அதிரடி!

கே.கே. நகர் சரவணபவன் உணவகத்திற்கு சீல் வைத்த சி.எம்.டி.ஏ. அதிகாரிகள்- வீடியோ
சென்னை: சென்னை கே.கே நகரில் இயங்கி வந்த சரவணபவன் உணவக கிளை முறையான அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியதால் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர்.
சென்னை கே.கே நகர் அசோக் பில்லர் சாலைக்கு அருகே இயங்கி வந்த சரவணபவன் உணவக கிளையில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும (சி.எம்.டி.ஏ) அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர்.

இதில் சி.எம்.டி. மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் முறையான அனுமதி பெறாமல் கட்டிட உரிமையாளர் இரண்டாவது தளத்தை கட்டி இருந்ததால், அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்து மூடி உள்ளனர்.
ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவணபவன் உணவக கிளை பார்க்கிங் வசதி இல்லாமல் இயங்குவது, தீதடுப்பு உபகரணங்கள் வைக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் சோதனையிட்டு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.