For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் - உறவினர்கள் போராட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி கார்த்திக் உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை துரைப்பாக்கம் அருகில் குமரன்குடில் பகுதியில் மளிகைக் கடை வைத்திருப்பவர் சேகர். திங்கட்கிழமையன்று இரவு 7.30 மணிக்கு தனது கடையில் அமர்ந்திருந்தார். அப்போது சற்று தூரத்தில் இளம் பெண்ணின் அபயக்குரல் கேட்டது. அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்தபோது சற்று தொலையில் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்றுகொண்டிருந்தனர். அவரோ பையை விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டு போராடிக் கொண்டிருந்தார்.

Chennai: Man dies in lock-up, kin protest

அப்போது ஆட்டோவை ஓட்டியதால் கீழே விழுந்த அவர் நடுரோட்டில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். ஆங்காங்கே பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. ஆனால், சேகர் ஓடோடிச் சென்று காயமடைந்திருந்த அந்தப் பெண்ணை தூக்கி மீட்டார். இதற்குள் அந்தப் பெண் மயக்கமடைந்துவிட்டார். ஆட்டோவுக்குள் ஓட்டுநருடன் மொத்தம் 4 பேர் இருந்தனர். பின்னால் அமர்ந்திருந்தவர்கள் இருவரின் கையில் பெரிய பட்டாக் கத்திகள் இருந்தன. அதைக் காட்டி மிரட்டிக் கொண்டே அவர்கள் ஆட்டோவுடன் வேகமாக தப்பிச் செல்ல முயன்றனர்.

ஆனாலும் சேகர் வேகமாக ஓடி ஆட்டோவுக்குள் கையை விட்டு ஒருவரின் சட்டைக் காலரை பிடித்து சாலையில் தூக்கி வீசினார். அவரை மடக்கிப் பிடித்து தனது காலால் அழுத்திய நிலையில் ஆட்டோவிலிருந்து குதித்த இன்னொருவர் சேகரின் முதுகில் பட்டாக் கத்தியால் வெட்டினார். அப்போதும் விடாமல் திரும்பியவர் கத்தியை கையால் பிடித்து சமாளித்தார். அப்போது இன்னொருவர் சேகரின் கழுத்தை நோக்கி வேகமாக கத்தியை வீசினார். நொடிப் பொழுதில் சேகர் விலகிக்கொண்டபோதும் கத்தி பட்டு காது அறுந்தது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் 4 பேரும் ஆட் டோவில் ஏறி தப்பிவிட்டனர். சுமார் 10 நிமிடங்கள் நடந்த இந்தப் போராட் டத்தை அக்கம்பக்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் கூடி நின்று வேடிக்கைப் பார்த்துள்ளனர். பின்னர் படுகாயமடைந்த அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சேகருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காது ஒட்டப்பட்டுள்ளது.

விசாரணைக் கைதி கைது மரணம்

நகையை பறிகொடுத்த பெண்ணின் பெயர் சினேகா லதா என்பதும், இவர் வடமாநிலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பான புகாரில் சிசிடிவி கேமராவை தனிப்படை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த மீன் கார்த்திக் ,23 என்பவர் செயினை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கார்த்திக் உயிரிந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

English summary
A 22-year-old youth name karthi in Chennai was arrested on theft charges died in police custody on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X