For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 300க்கும் அதிகமான இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு.. பயமுறுத்தும் பேரிடர் மேலாண்மை

ஆகஸ்ட் மாதத்தில் அதிக அளவில் மழை பெய்தால், பெரிய அளவில் சென்னையில் வெள்ளம் ஏற்படும் என்று பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையின் பெரும்பாலான பகுதில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு- வீடியோ

    சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் அதிக அளவில் மழை பெய்தால், பெரிய அளவில் சென்னையில் வெள்ளம் ஏற்படும் என்று பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்து இருக்கிறது.

    தற்போது சென்னையில் மிதமான வெப்பநிலை நிலவுகிறது. கடந்த வாரம் சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது.

    இந்த நிலையில்தான் சென்னையில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்து இருக்கிறது. இதற்கு சில காரணங்களையும் அடுக்கி உள்ளது.

    மழை பெய்யும்

    மழை பெய்யும்

    சென்னையில் இந்த மாதம் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த மாதத்தில் பெரிய அளவில் இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மட்டுமில்லாமல், தமிழகத்தில் உள்ள மற்ற சில கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் வெள்ளம்

    சென்னையில் வெள்ளம்

    இந்த நிலையில்தான் சென்னையில் வெள்ளம் ஏற்படும் பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி வானிலை ஆய்வு மையம் சொன்னபடியே மழை பெய்தால் கண்டிப்பாக சென்னையில் வெள்ளம் ஏற்படும் என்றும் கூறியுள்ளது. முக்கியமாக சென்னையில் மொத்தமும் 300க்கும் அதிகமான இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

    எங்கு வெள்ளம்

    எங்கு வெள்ளம்

    சென்னையில், கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூர், வண்டலூர், கோயம்பேடு, விருகம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர், டி நகர், நுங்கம்பாக்கம், ஆவடி, காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, பல்லாவரம், வளசரவாக்கம், மீனம்பாக்கம், எக்மோர் ஆகிய இடங்களில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 300 இடங்களில், சென்னையின் முக்கியமான பகுதிகள் அடங்கிவிட்டது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    இதற்கு சில காரணங்களை கூறியுள்ளது. அதன்படி எதிர்பார்த்ததை விட இந்தியாவில் இந்த முறை அதிக மழை இருக்கும். மழையால் நெரிசல் மிகுந்த நகரங்கள் பாதிக்கும். முக்கியமாக சென்னையில் கழிவுநீர் மேலாண்மை, வெளியேற்றம் சரியாக இல்லாததால் அதிக தண்ணீர் தேங்கும். ஏரிகள் சில காணாமல் போய் இருப்பதால் வெள்ளம் ஏற்படும் என்றுள்ளது.

    தீவிர ஏற்பாடு

    தீவிர ஏற்பாடு

    ஆனால் சென்ற சென்னை வெள்ளம் போல இந்த முறை ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த வெள்ள எச்சரிக்கைக்கு தமிழக அரசு இப்போதே தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. தேவையான ஏற்பாடுகளை ஏற்கனவே தமிழக அரசு எடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. சென்ற முறை போல இந்த முறை செம்பரம்பாக்கம் அவலம் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    Chennai may hit with a heavy flood, warns Disaster Management Board.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X