For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூவம் ஆற்றின் ஆக்கிரமிப்புக்கு கருணாநிதி தான் காரணம்: மேயர் சைதை துரைசாமி குற்றச்சாட்டு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: கூவம் நதியின் ஆக்கிரமிப்புக்கு திமுக தலைவர் கருணாநிதி தான் காரணம் என்று சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அப்போது செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது குறித்து விளக்கம் அளித்த துரைசாமி, ஆறுகளை முதலில் ஆக்கிரமித்தது திமுக தான் என கூறினார்.

chennai mayor Allegation on karunanidhi

1967ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி தான் முதல் முறையாக ஆறுகள் ஆக்கிரமிப்பை தொடங்கி வைத்தார். மேலும் ஏரி அமைந்திருந்த பகுதியில் தான் வள்ளுவர் கோட்டத்தை கொண்டு வந்தார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை காவலர்கள் திமுக உறுப்பினர்களை மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியேற்றினர்.

English summary
chennai mayor saidai duraisamy Allegation on dmk leader karunanidhi about Cooum river aggression
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X