For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு வரை சென்னைவாசிகளுக்கு சேவை செய்யும் மெட்ரோ ரயில்

By Jaya
Google Oneindia Tamil News

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், சொந்த ஊர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு படையெடுத்து வருவதால், இன்று அதிகாலை, 5 மணி முதலே, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் ரயில், பேருந்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

chennaimetro

சென்னையில் பல்வேறு இடங்களில் வசிப்போர், கோயம்பேடு பேருந்து நிலையம் செல்ல, மெட்ரோ ரயிலில் அதிகளவில் பயணிக்கின்றனர்.

கோயம்பேடு - ஆலந்துார் இடையே, காலை, 6:00 மணிக்கு துவங்கி, இரவு, 10:00 மணியுடன் மெட்ரோ ரயில் சேவை முடிந்து விடும்.
கடந்த ஒரு வாரமாக, பயணிகளின் வருகைக்கு ஏற்ப, நள்ளிரவு வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிகாலையிலும் மெட்ரோ ரயில் சேவை தேவை என்பதை உணர்ந்த நிர்வாகம், இன்று அதிகாலை, 5 மணிக்கே, ரயில் இயக்கத்தை துவக்கியுள்ளது.

தொடங்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு சென்னை மெட்ரோ ரெயில்களுக்கு பொதுமக்களிடம் போதுமான வரவேற்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் சென்னையை மழை வெள்ளம் சூழ்ந்த போது அனைத்து போக்குவரத்துகளும் சம்பித்த போது பொதுமக்களுக்கு கைகொடுத்தது மெட்ரோ ரயில்.

English summary
In the last week of November, the Chennai Metro became a savior for many as the city witnessed heavy rain in a short span of first train from Alandur will leave at 5.am. The last train from Koyambedu will leave at 10.40 p.m. and from Alandur at 11 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X