For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்கும்... தென்தமிழகத்துக்கும் மழைக்கு வாய்ப்பு

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு நாளை சாதகமான சூழல் நிலவியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: கேரளத்தில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குவதற்கான சாதகமான சூழல் தற்போது நிலவியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு நாளை சாதகமான சூழல் அமைகிறது.

Chennai Metrological department says about Southwest monsoon tomorrow

தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. குமரிக்கடல், கேரளம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் உள்ள கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

அதுபோல் லட்சத்தீவு பகுதிகளில் மே 31-ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். மார்ச் , ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட 23 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் மார்ச் 1 முதல் மே 28 வரை 150 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வால்பாறையில் 7 செ.மீ. திருச்சியில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது என்றார் பாலசந்திரன்.

வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

English summary
Chennai Metrological Department says that Southwest Monsoon starts tomorrow in Kerala. At the same time South Tamilnadu will get rainfall by next 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X