For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொகரம்: ஷியா முஸ்லீம்கள் ரத்தம் சொட்டச் சொட்ட துக்கம் அனுஷ்டிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மொகரம் பண்டிகையை ஒட்டி நெஞ்சிலும், முதுகிலும் பிளேடால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ஷியா முஸ்லீம்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சென்னையில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்குப் பகுதியில் மொகரம் அனுஷ்டிக்கப்பட்டது.

முஸ்லீம் மாதங்களில் முதல் மாதமான மொகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இம்மாதத்தின் 10ம் நாளில் நபிகள் நாயகத்தின்(ஸல்) பேரன் இமாம் ஹூசைன்(ரலி) கர்பலா என்ற யுத்த களத்தில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேருடன் தன்னுயிரையும் இழந்தார்.

இமாம் ஹூசைன் போரில் கொல்லப்பட்ட இந்தநாளை துக்க தினமாக ஷியா முஸ்லிம் பிரிவினர் அனுசரிக்கின்றனர்.

இதனை முன்னிட்டு சென்னையில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் மொகரம் மாதத்தின் முதல் தேதியில் பஞ்சத்தன் என்ற கொடிமரத்தை வைத்து சிறப்பு தொழுகை நடத்தினர். மேலும் கருப்பு கொடியேற்றி தங்களது துக்கத்தை தெரிவிக்கும் வகையில் மொகரம் முதல் தேதியிலிருந்து வீட்டிலிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் கருப்பு உடையணிந்து கொள்கின்றனர்.

{photo-feature}

English summary
Fast and make a prayer to the Prophet during Muharram, the first month of the Islamic calendar and the chances are that it will be answered. There are peaceful spiritual retreats in homes, community halls and mosques across Chennai, far removed from the tempestuous sea of chest beating mourners, who take out processions in Triplicane, Royapettah and Thousand Lights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X