For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏக் வாளி மே, ஏக் ஆயில்=தூய்மை இந்தியா! ஆயிலை அள்ள முடியாத அரசை விளாசும் நெட்டிசன்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இரு கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில் கடலில் கொட்டிய கச்சா எண்ணையை ஒரு வாரமாகியும் அகற்ற முடியாமல் திணறுகின்றன மத்திய, மாநில அரசுகள்.

தன்னார்வலர்கள் தாங்களாகவே முன் சென்று அவற்றை அப்புறப்படுத்தி வருகிறார்கள். இதுதவிர கடலோர காவல்படை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசு துறை பணியாளர்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இப்படி பழைய கால முறைப்படிதான் கழிவுகள் அகற்றப்படுகிறதே தவிர, டிஜிட்டல் இந்தியா, ஸ்வச் பாரத் என்ற கோஷங்களுக்கும் கடலில் நடைபெறும் சம்பவங்களுக்கும் கொஞ்சமும் சம்மந்தமே இல்லை. வெறும் பசப்பு வார்த்தைகளாகவே இந்த திட்டங்கள் எல்லாம் காற்றில் கலந்துவிட்டன. இது நெட்டிசன்களை கோப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உலவும் சில கேலிகளை பாருங்கள்.

வாளியும், தூய்மை இந்தியாவும்

ஏக் வாளி மே ஏக் ஆயில் மே கிளின் மே... #கிளின்_இந்தியா #டிஜிட்டல்_இந்தியா.. இவ்வாறு அரசின் திட்டங்கள் பலனற்றி போனதை சுட்டி காட்டுகிறார் இந்த நெட்டிசன்.

பீட்டா எங்கே

"Where is PETA? #PETA #chennaioilspill" கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பீட்டா அமைப்பு எங்கே சென்றது என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

கூடங்குளம் கதி

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டால் எப்படி தடுக்கும் அரசு என்று கேட்கிறது இந்த டிவிட்.

பாராட்டும்

"Saluting workers, coast guard, firemen, fishermen & volunteers form colleges who are helping to clear the thick sludge of #ChennaiOilSpill" என்று, கூறி இந்த ரிஸ்கான வேலையை எடுத்து செய்துவரும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறது இந்த டிவிட்.

English summary
Netizens slams government for not taking enough action to remove oil spill from Chennai sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X