For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் இன்று அறிவியல் அதிசய நாள்... ஆமாங்க நிழல் இல்லா நாள்!

சென்னையில் இன்று அறிவியலின் அதிசயமாம் நிழல் இல்லா நாளை யாராவது அனுபவித்தீர்களா மக்களே.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : சென்னையில் இன்று அறிவியலின் அதிசயமாம் வானியல் ஆய்வாளர்கள் மொழியில் குறிப்பிடப்படும் நிழல் பூஜ்ஜியம் நிகழ்ந்தது. பள்ளி மாணவர்கள் இந்த அதிசய நிகழ்வை பரிசோதித்து பார்த்ததோடு அதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகளையும் கண்கூடாக உணர்ந்தனர்.

சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேல் நாள்தோறும் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். சூரியன் செங்குத்தாக வரும்போது, ஓரிடத்திலுள்ள ஒரு பொருளுடைய நிழலின் நீளம், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Chennai people today observed the Zero shadow day

இந்த அதிசய நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாள்களில் நிகழும். சூரியனின் வட நகர்வு நாள்களில், ஒரு நாளும், தென் நகர்வு நாள்களில் ஒரு நாளும் என ஆண்டுக்கு இருமுறை இது நிகழும். மேலும் பகல் 12 மணிக்குத்தான் நிழல் பூஜ்ஜியமாகும்.

இதன்படி சென்னை மற்றும் பெங்களூரில் நிழல் இல்லா நாளை மாணவர்கள் கண்டு ரசித்தனர். பெங்களூரு ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு அறிவியல் பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்று சரிகாக 12.17 மணியளவில் நிழல் பூஜ்ஜியமாகும் நிகழ்வை கண்டு ரசித்தனர். இந்த நிகழ்வு ஆக்ஸ்ட் 18ம் தேதி மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
April 24 marks one of the two days in the year when one can observe Zero Shadow Day and Chennai people today observed the Zero shadow day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X