For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது பெண் கொடுத்த புகார்... விசாரணையை தொடங்கியது காவல் துறை

Google Oneindia Tamil News

சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது பெண் ஒருவர் கொடுத்த புகாரின் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் கடந்த 24 ஆண்டுகளாக தொலைபேசி உதவியாளராக பணிபுரிந்த வளர்மதி என்பவர் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

EVKS.Elangovan

அதில் காமராஜர் அரங்கிற்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள 120 கடைகளில் இருந்து பெறப்படும் பணத்தில், பல கோடி ரூபாயை வணிக வளாக மேலாளர் நாராயணன் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளார்.

வாடகை பணத்தை கட்சி கணக்கில் சேர்க்கா மல், மோசடி செய்து அபகரித்ததாகவும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தால், தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் வளர்மதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அந்த பெண் ஊழியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதையடுத்து விசாரணை தொடங்கியுள்ளது.

English summary
Chennai police begins enquiry about a lady lodged complait on EVKS.Elangovan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X