For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை தேடி டெல்லி விரைந்த தனிப்படை போலீஸ்: இன்றே கைதாக வாய்ப்பு?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாதபடி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். இன்று இரவுக்குள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைது செய்யப்படுவார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னைக்கு சமீபத்தில் வந்த பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசினார் இளங்கோவன், இதைக் கண்டித்து கடந்த 5 நாட்களாக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில், இளங்கோவன் மீது சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னை சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்டும், திருச்சியில் காங்கிரஸ் அலுவலகத்தை தாக்கியும் இளங்கோவன் வீட்டை முற்றுகையிட்டும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது புகார்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது புகார்

இந்நிலையில், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் ஊழியராக பணியாற்றி வந்த வளர்மதி என்பவர், சென்னை காவல்துறை ஆணையரிடம் அளித்த புகாரில், காமராஜர் அரங்கத்தில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் அதற்கு மாநில தலைவர் இளங்கோவன், நிர்வாகி நாராயணன் ஆகியோர்தான் காரணம் என்றும் கூறியிருந்தார். இது குறித்து கேட்டபோது தன்னை வேலையை விட்டு நீக்கியதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

இந்தப் புகார் மீது தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இது குறித்து இணை கமிஷனர் அருண், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் சிவபாஸ்கர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தப் படையினர், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்திய தண்டனைச் சட்டம் 323, 509, 354, 506(1) மேலும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம்,406, 420 ஆகிய 7 பிரிவுகளின் கீழ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜாமீன் பெற முடியாத வழக்கு

ஜாமீன் பெற முடியாத வழக்கு

இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர் கீழ்கோர்ட்டில் ஜாமீன் பெற முடியாது. செஷன்ஸ் அல்லது உயர்நீதிமன்றத்தில்தான் ஜாமீன் பெற முடியும். இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோவன் ஜாமீன் கேட்டு வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

தடை விதிக்க மறுப்பு

தடை விதிக்க மறுப்பு

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி வைத்தியநாதன், கைது செய்வதற்கு இடைக்காத தடை பிறப்பிக்க முடியாது. விசாரணை திங்கள்கிழமை நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது.

டெல்லி பறந்த இளங்கோவன்

டெல்லி பறந்த இளங்கோவன்

இதனிடையே வெள்ளிக்கிழமை மாலையில் திடீரென்று இளங்கோவன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அவர், நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கும் அவர், மேலிட தலைவர்களையும் சந்தித்து இந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

விரட்டும் போலீஸ்

விரட்டும் போலீஸ்

இதற்கிடையில், இளங்கோவன் மீதான புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசில் ஒரு பிரிவினர் இன்று காலையில் டெல்லி சென்றுள்ளதாகவும், அவர்களுக்கு உதவியாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைது?

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைது?

தனிப்படை போலீசார் டெல்லியில் இளங்கோவனை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இளங்கோவனை கைது செய்ய தனிப்படை டெல்லி சென்றுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The Chennai police on Friday registered a case against TNCC president EVKS Elangovan, Based on a complaint from R Valarmathi, a sacked employee of Tamil Nadu Congress Committee charitable trust. Sources said, Tamil Nadu police rushed to Delhi EVKS Elangovan will arrest immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X