For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெற்றோர்களே உஷார்! கோடை விடுமுறையில் சிறார்களுக்கு வாகனத்தை கொடுத்தால் நடவடிக்கை பாயுமாம்!!

சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் அதிரடியாக தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    செங்கல்பட்டு சுங்க சாவடி அருகே வனப்பகுதியில் பயங்கர தீ- வீடியோ

    சென்னை: 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீதும், வாகன உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் தெரிவித்துள்ளது.

    விடுமுறை நாட்களில் பெற்றோரின் வாகனங்களை எடுத்துக் கொண்டு சிறார்கள் நண்பர்களுடன் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் போது சாலை விதிகளை மீறுகின்றனர்.

    Chennai Police says that Children under 18 years should not ride any vehicles

    ஒரு பைக்கில் 4 பேர் செல்வது, இரு பைக்குகளில் நண்பர்களுடன் கைகோர்த்து கொண்டு செல்வது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சாலை விபத்துகளில் இவர்கள் சிக்குவதோடு அப்பாவி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    பெற்றோர்களிடம் வாகனத்தை எடுத்து கொண்டு பந்தயங்களிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர். இதை கருத்தில் கொண்டு சென்னை போலீஸ் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

    அதில் சிறார்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீறினால் ரூ. 1000 அபராதம் மற்றும் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

    English summary
    Chennai Police issues circular that the Children under 18 years old and adults those who have not having License should not drive the vehicles. If drives, severe action will be taken against them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X