For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நகைக்கடைக் கொள்ளையன் நாதுராம் சென்னை போலீசிடம் ஒப்படைப்பு

கொளத்தூர் நகைக்கடை கொள்ளையன் நாதுராம் தமிழக போலீசிடம் ராஜஸ்தான் போலீசார் ஒப்படைத்தனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    கொள்ளையன் நாதுராம் சென்னை போலீசிடம் ஒப்படைப்பு- வீடியோ

    சென்னை: நகைக்கடை கொள்ளையன் நாதுராமை தமிழக போலீசிடம் ராஜஸ்தான் போலீசார் ஒப்படைத்தனர். இன்றிரவு சென்னை கொண்டு வரப்பட உள்ளார் நாதுராம்.

    கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பான விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரி ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    Chennai police takes the custody of Nathuram

    அவர்களை பிடிக்கச் சென்ற போது நிடந்த துப்பாக்கிச் சூட்டில் சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உயிரிழந்தார். பெரியபாண்டியன் கொல்லப்பட்டு குறித்து சர்ச்சை நிலவியது. இன்ஸ்பெக்டர் முனிசேகர் தவறுதலாக சுட்டு கொன்று விட்டதாகவும் கூறப்பட்டது.

    இதனையடுத்து, தினேஷ் சவுத்ரி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த கொள்ளையன் நாதுராமை நீண்ட தேடுதலுக்கு பிறகு ஜெய்ப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

    பெரியபாண்டியனை தாம் துப்பாக்கியால் சுடவில்லை என்று ராஜஸ்தான் போலீசில் நாதுராம் வாக்குமூலம் அளித்துள்ளார். கொள்ளையடித்த நகைகள் அனைத்தையும் சென்னையிலேயே விற்பனை செய்து விட்டதாகவும் கூறியிருந்தார் நாதுராம்.

    ஜெய்ப்பூர் சிறையில் உள்ள கொள்ளையன் நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரியை போலிஸ் காவலில் எடுக்க கூடுதல் ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்தனர். அவர்களிடம் நாதுராமை சென்னை போலீசார் ஒப்படைத்தனர். நாதுராமை கைது செய்த தமிழக போலீசார் இன்றிரவு சென்னைக்கு கொண்டு வர உள்ளனர்.

    English summary
    Rajasthan Police have handed over the Nathuram to Chennai police team and Chennai police team is bringing him back to the city.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X