For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடையாற்றில் கடும் வெள்ளம்: சைதாப்பேட்டை, அடையாறு காந்திநகர் உள்ளிட்ட கரையோர மக்கள் வெளியேற உத்தரவு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

அடையாற்றில் கடும் வெள்ளம்: சைதாப்பேட்டை உள்ளிட்ட கரையோர மக்கள் வெளியேற உத்தரவு

சென்னை: அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சைதாப்பேட்டை, காந்திநகர் உள்ளிட்ட பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Chennai Rain: People living near Adyar river asked to evacuate from the place

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி இன்று காலை வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் தற்போது வினாடிக்கு, 5000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஏரிக்கு வரும் நீர் வரத்து அதிகரிப்பதால், உபரி திறந்துவிடும் அளவு 7500 வரைக்கும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதனிடையே, மதியம் 2.30 மணியளவில், திறக்கப்படும் உபநீர் அளவு, கலெக்டர் எச்சரித்தைவிடவும் அதிகமான அளவாக 20,000 கன அடி என்ற அளவி்ல் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருவது நல்லது என மறு அறிவிப்பு வெளியானது.

அடையாறு கரையோரம் உள்ளவர்களும், சைதாப்பேட்டை, காந்திநகர் பகுதிகளில் வசிப்போர்களும் உடனே வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

English summary
Due to the rain related flood, people who living near Adyar river asked to evacuate from the place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X