For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிவாரண பணிகளுக்காக படகுகள், மருத்துவ உபகரகணங்களுடன் சென்னை வந்தது "ஐராவத்" போர்க்கப்பல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளத்தால் மூழ்கியுள்ள சென்னையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக கடற்படையின் ஐராவத் போர்க்கப்பல் படகுகள், மருத்துவ உபகரணங்களுடன் நேற்று சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையின் எந்த பகுதியையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை.

Chennai rains: INS Airawat rushed to help relief efforts

அனைத்து பகுதிகளிலும் பல அடி உயரத்துக்கு ஆளையே மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த வெள்ளத்தால் ஒட்டுமொத்த சென்னையுமே தத்தளித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகின்றனர்.

இந்த மக்களை மீட்பது மற்றும் நிவாரணப் பகுதிகளில் முப்படையினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீட்புப் பணிகளுக்காக கடற்படையின் ஐராவத் போர்க்கப்பல் நேற்று இரவு சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

Chennai rains: INS Airawat rushed to help relief efforts

மீட்பு பணிகளுக்கான படகுகள், மருத்துவ உபகரணங்களுடன் இப்போர்க்கப்பல் வந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படை அதிகாரி அலோக் பட்நாகர் கூறுகையில், கடற்படைக்கு சொந்தமான ஐராவத் கப்பல் மீட்பு பணிக்கு வந்துள்ளது. அதில் மீட்பு படகுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

தேவையான மருத்துவ உதவிகள் செய்யவும் கடற்படை தயாராக உள்ளது. 7 படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அதன் மூலம் ஏராளமானவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என்றார்.

English summary
The Navy rushed INS Airawat to bolster the rescue and relief efforts in rain-battered Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X