For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரை விட சென்னை காஸ்ட்லி சிட்டியாம்! சர்வே சொல்லுது!!...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியலில் மும்பை, டெல்லிக்கு பிறகு சென்னைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. நியூயார்க்கில் இயங்கி வரும் மனித வளத்துறை சார்ந்த நிறுவனம், உலகில் அதிகம் செலவாகும் நகரங்கள் என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட சர்வேயில் இது தெரியவந்துள்ளது.

உலகின் முக்கியமான 200 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில், வீட்டு வாடகை முதல் போக்குவரத்து செலவுகள் வரை கணக்கில் கொள்ளப்பட்டன.

சர்வே முடிவுகளின் படி உலக அளவில் சென்னைக்கு 158 வது இடம் கிடைத்துள்ளது. கடந்த வருடம் 157 வது இடத்தை சென்னை பிடித்திருந்தது. இந்திய தலைநகரான டெல்லியை விட சென்னை ஐந்து சதவீதம் செலவு குறைவாக இருப்பதாகவும்,பால்,மளிகை சாமான்கள் போன்றவை டெல்லி,மும்பையில் இருக்கும் விலைவாசிக்கு இணையாகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் காஸ்ட்லி நகரங்கள்

உலகில் காஸ்ட்லி நகரங்கள்

உலக அளவில் ஹாங்காங் அதிக செலவு பிடிக்கும் நகரத்தின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அங்கோலா, ஜூரிச், சிங்கப்பூர், டோக்கியோ ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. உலக அளவில் மும்பை 82வது இடத்திலும், டெல்லி 130வது இடத்திலும், சென்னை 158வது இடத்திலும், பெங்களூரு 180வது இடத்திலும், கொல்கத்தா 194வது இடத்திலும் உள்ளது.

இந்தியாவின் காஸ்ட்லி நகரங்கள்

இந்தியாவின் காஸ்ட்லி நகரங்கள்

இந்தியாவின் அதிகம் செலவாகும் நகரமாக டெல்லியும், இரண்டாவது இடத்தில் மும்பையும் உள்ளன.ஐடி நகரமான பெங்களூரு உலக அளவில் 180வது இடமும், இந்திய அளவில் சென்னைக்கு அடுத்தபடியாக நான்காவது இடமும் பிடித்துள்ளது.

சென்னை செலவுகள்

சென்னை செலவுகள்

இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களில் சென்னைக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட சென்னையில் வீட்டு வாடகை இந்த வருடம் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் தேவைகள்

மனிதர்களின் தேவைகள்

மனிதர்களுக்குத் தேவையான 200 அடிப்படைப் பொருட்களின் விலைகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் வீடு முதல் போக்குவரத்து வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளது.

எது அதிகம் எது குறைவு

எது அதிகம் எது குறைவு

உலக அளவில் எடுத்துக் கொண்டால், சென்னை மாநகரம் 158வது இடத்தில் உள்ளது. துணி மற்றும் காலணிகளைப் பொருத்தவரை சென்னையில் சற்று விலை அதிகம் என்றும், டெல்லி மற்றும் மும்பையை ஒப்பிடும் போது பால், காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை சென்னையில் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வாடகை

வீட்டு வாடகை

வீட்டு வாடகையைப் பொருத்தவரை, கடந்த ஓராண்டில் 15% அளவுக்கு உயர்ந்திருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. செலவுகள், வாடகை உயர்வு என காஸ்ட்லி நகரமாகவே மாறி வருகிறது சென்னை.

மது விலை அதிகம்

மது விலை அதிகம்

அரசே விற்பனை செய்வதால், சென்னையில் மலிவாகக் கிடைக்கும் என்று நினைத்தால் அதுவும் தவறு. மும்பையோடு ஒப்பிடுகையில் சென்னையில் மது வகைகளின் விலையும் அதிகம்.

English summary
Chennai has been ranked India’s third most expensive city to live in for the expatriate community after Mumbai and Delhi, according to Mercer’s 2016 Cost of Living Survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X