For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேளச்சேரியில் களைகட்டும் மத்திய அரசின் சாதனை கண்காட்சி.. 'மோடியுடன்' செல்ஃபி எடுக்க ஏற்பாடு!

பாஜக தமிழகத்தில் வேகமாக காலூன்றி வருகிறது என்பதற்கான அடுத்த கட்டமாக சென்னையில் நடக்கும் மத்திய அரசு சாதனை கண்காட்சியில் தமிழில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு பிரதமர் மோடியுடன் டிஜிட்டலில் செல்ஃபி எடுக்கும் சிறப்பு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3 ஆண்டுகால மத்திய அரசு நிறைவுபெற்றுள்ளது. இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும், மத்திய அரசின் சாதனைகளை விளக்கவும் சென்னை வேளச்சேரியில் மத்திய விளம்பரத் துறை சார்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார். கண்காட்சியில் முழுக்க முழுக்க எங்கு பார்த்தாலும் பிரதமர் மோடி புகைப்படங்களால் நிரப்பட்டுள்ளது.

3 ஆண்டு சாதனை பட்டியல்

3 ஆண்டு சாதனை பட்டியல்

மக்கள் மீது அக்கறை காட்டும் அரசு பாஜக, மேக் இன் இந்தியா மற்றும் துறை ரீதியாக மத்திய அரசு செய்துள்ள அனைத்து விஷயங்களும் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இவை அனைத்தும் தமிழில் தலைப்பிடப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

புது திட்டமா?

சென்னையில் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கண்காட்சியை பார்வையிட்டனர். பாஜக தமிழகத்தை கைப்பற்றும் வகையிலாக திட்டத்தோடு காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

தமிழில் விளம்பரம்

தமிழில் விளம்பரம்

இந்நிலையில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டத்தை சென்னையில் நடத்தி, அதிலும் தமிழில் விளம்பரம் செய்யப்படும் மோடியின் சாதனைகள் மூலம் பாஜக என்ன செய்ய நினைக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிஜிட்டல் செல்ஃபி

இது மட்டுமல்ல இளைஞர்கள் மற்றும் செல்ஃபி பிரியர்களை கவர சிறப்பான திட்டமும் செய்யப்பட்டுள்ளது. ஆம் டிஜிட்டல் முறையில் பிரதமர் மோடி அருகில் நின்று செல்ஃபி எடுப்பது போன்ற நூதன ஏற்பாடையும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை செய்துள்ளது.

புதுபுதுசா யோசிக்கும் டிஜிட்டல் இந்தியா அரசு, வாக்காளர்களைக் கவர மட்டும் அவர்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.

English summary
Union minister venkaiah Naidu visited the stall at DVAP exhibition at chennai and appreciated the interesting presentation on Making of Developed India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X