For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலறவைத்த மழை... சுரங்கப்பாதைகளில் மழைநீரை அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்!

சென்னையில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழையால் நகரின் பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் மழைநீர் சூழ்ந்து கொண்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்தம்பித்தது சென்னை.. பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. வீடியோ

    சென்னை : சென்னையில் நேற்று மாலை முதல் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் நகரின் பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் காலை முதல் மோட்டார் வைத்து நீரை இரைச்சும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் தொடர்ச்சியான நேற்ற 4 மணி நேரத்திற்கு மேல் இடி, மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய 4 நாட்களிலேயே சென்னை கடுமையான மழையால் அல்லோகலப்பட்டு வரகிறது. நேற்று காலை முதல் சென்னையில் வெயில் இயல்பாக இருந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.

     Chennai's most of the subways are filled with rainwater, corporation employees were draining out the water

    ஆனால் பிற்பலுக்குப் பின் லேசான தூரல் இருந்த நிலையில், மாலை 5 மணி முதல் நகர் முழுவதும் கடுமையான மழை பெய்தது. தொடர்ச்சியாக மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் மழை கொட்டு கொட்டு என கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் ஓட வழியின்றி கிடைத்த இடத்தில் எல்லாம் தேங்கி நின்றது.

    சென்னையில் துரைசாமி சுரங்கப்பாதை நேற்ற இரவு மழை நீர் தேங்கியதால் மூடப்பட்டது. இதே போன்று கீழ்பாக்கம் அருகே உள்ள கெங்குரெட்டி மேம்பாலத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அந்தச் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. கத்திப்பாரா மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள சிறிய சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்கியுள்ளது.

    சென்னையில் 480 இடங்களில் சுரங்கப்பாதை உள்ளது. அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியில்
    மாநகராட்சி உழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மக்கள் சுரங்கப்பாதைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, காவல்துறையினர் கண்காணிப்பில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    English summary
    Chennai's most of the subways stagnated with water due to rain slashed last night and the corporation employees are involved in the works to drain out the water.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X