For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை: தலைமை செயலக ஊழியர்கள் இன்று போராட்டம்

10 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காததை கண்டித்து சென்னை தலைமை செயலக ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளாகியும் இன்னும் பதவி உயர்வு வழங்காததை கண்டித்து இன்று ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் தலைமை செயலக ஊழியர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், 10 ஆண்டுகளாக தலைமை செயலக ஊழியர்களுக்கு பதவி உயர்வு இல்லை.

Chennai Secretariat staffs involve in protest

தலைமை செயலகத்தில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. 1700 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

ஏ கிரேடு, பி கிரேடு ஊழியர்களுக்கு மீண்டும் போனஸ் வழங்க வேண்டும்- தலைமை செயலக ஊழியர்கள். நிதி துறையில் அனைத்து பொறுப்புகளுமே முக்கியமானவையே

திறந்திலை பல்கலைக்கழகத்தில் படித்து பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு தர வேண்டும் என்றனர். பதவி உயர்வு உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

English summary
Chennai Secretariat staffs involve in protest for not giving promotion to officers for more than 10 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X