For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி நகர் சென்னை சில்க்ஸ் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் உயிர்த்தெழும்! - ஒரு வைரல் கடிதம்

தி சென்னை சில்க்ஸின் தி நகர் மற்றும் சென்னை நகர வாடிக்கையாளர்களாகிய நல் உள்ளங்களுக்கு!

By Shankar
Google Oneindia Tamil News

தி சென்னை சில்க்ஸின் தி நகர் மற்றும் சென்னை நகர வாடிக்கையாளர்களாகிய நல் உள்ளங்களுக்கு!

ஆலமரத்தின் விழுது எழுதும் கடிதம்... அன்னையே நீவிர் எம்மை விட்டு மறைந்தாய்... ஒரு இலட்சம் குடும்பங்கள் தாயை இழந்த பிள்ளைகளாய் தவித்தோம். அதன் தாக்கம் இன்னும் ஆற்றுவதற்குள் மற்றுமொரு பேரிடி, நேற்று நடந்த தீ விபத்து.

Chennai Silks letter to customers

இச்செய்தி ஊடகங்களுக்கோ தீனி... எம்மை போன்று பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் காலன் பறித்துக் கொண்ட ரணம். தி சென்னை சில்க்ஸ் முதலாளி உழைப்பால் வளர்ந்த நிறுவனமல்ல... அதன் பெயர் மறைவதற்கு! லட்சோப லட்ச குடும்பங்களின் வியர்வையால், உழைப்பால் உயர்ந்த நாங்கள் பட்டை தீட்டிய வைர நிறுவனம்தான் தி சென்னை சில்க்ஸ்.

சென்னை ஊழியர்கள் மனம் தளர வேண்டாம். விழுதுகளாய் பதினாறு கிளை ஊழியர்கள் உள்ளோம்... தி நகர் மற்றுமொரு கிளையாக பீனிக்‌ஸ் பறவையாக எழும். சிகரம் நோக்கி பறக்கும். இதுவரை ஆதரவு தந்து ஊழியர்களையும், நிறுவனத்தையும் வாழ வைத்த சென்னை நகர மக்களுக்கு கோடான கோடி நன்றியும் வாழ்த்துகளும்...

இந்நிகழ்வுக்கு மனமுருகிய நெஞ்சங்களே... உண்மையான வாடிக்கையாளர்களே எமது தெய்வங்கள்... உம்மை தாங்கும் விழுதுகளாய் நாங்கள் இருக்கிறோம் கவலை கொள்ள நீ பிறக்க வில்லை. தி சென்னை சிலக்ஸ் நீ எழும்புவாய்.. எழுப்ப படுவாய்... இறைவா எம் நிறுவனர், அவரது குடும்பத்திற்கு நல்ல மன திடம் தந்தும், சென்னை வாழ் ஊழியர்க்கு வாழ்வும் தர உமக்காக தினம் பிரார்த்தனை புரிவோம்.

உம் வளர்ச்சி, உமது பெயரை விழுதாய் நாங்கள் இருக்கும் வரை மறையாது.

மீண்டும் தி சென்னை சில்க்ஸ் கிளை தி நகரில் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன்...

-தி சென்னை சில்க்ஸ்

English summary
A letter sent by the name of recently burnt Chennai Silks for its loyal customers those support in the critical condition is going viral in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X