For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை புறநகரில் கனமழை... 24 மணிநேரத்திற்கு மழை நீடிக்குமாம்- சொல்கிறார் ரமணன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இலங்கையின் மேலடுக்கில் இருந்த சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை மற்றும் குமரியில் நிலை கொண்டுள்ளதால்,அடுத்த 24 நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த இரு தினங்களாக சென்னையின் நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் சாரல் மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இன்று காலையில் வெயிலும் மேகமூட்டமுமாய் மாறி மாறி கண்ணாமூச்சி ஆடி வந்த நிலையில், குரோம்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.

Chennai suburbs receive heavy rains

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி பகுதியில் கன மழை பெய்தது. இம்மழை சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதைத் தொடர்ந்து விவசாயிகள் நெல் நடவுப் பணிகளை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை விருதுநகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கன மழை பெய்ததில், மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இன்றும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இலங்கையின் மேலடுக்கில் இருந்த சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை மற்றும் குமரியில் நிலை கொண்டுள்ளதால்,அடுத்த 24 மணித்தியாலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai suburbs receive heavy rains

காலை 8 மணிமுதல் முடிந்த 24 நேரங்களில் பாபநாசத்தில் 8 சென்டிமீட்டர் மழையும்,மகாபலிபுரத்தில் 9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள சபாலா புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை எனவும் சென்னை வானிலை அமையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக உள்ள சபாலா, அதி தீவிர புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

English summary
Water-logging in several parts of Chennai suburbs areas after heavy rains, accompanied by strong winds and thunder and lightning of Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X