For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கே இல்லன்னா என்ன? நாங்க அங்க போய் பார்ப்போம்.. ஸ்பெஷல் ட்ரெயினில் புனே சென்ற சிஎஸ்கே ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயிலில் புனே செல்கின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    CSK அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயிலில் புனே பயணம்- வீடியோ

    சென்னை: ஐபிஎல் போட்டியைக் காண சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயிலில் புனே செல்கின்றனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 7 ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப்படும் என பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என பல்வேறு தமிழ் அமைப்புகளும் விவசாய சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டன.

    இதனால் கடந்த 7 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய முதல் போட்டி கடும் எதிர்ப்பு காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே நடைபெற்றது.

    செருப்பு வீச்சு

    செருப்பு வீச்சு

    ஆனாலும் போட்டி நடைபெறும் மைதானத்துக்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர் மைதானத்துக்குள் காலணிகளை வீசியதோடு கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    நாளை புனேவில் போட்டி

    நாளை புனேவில் போட்டி

    இதைத்தொடர்ந்து எஞ்சிய 6 போட்டிகள் தமிழகம் அல்லாத வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி நாளை புனேவில் நடைபெறுகிறது.

    ரசிகர்கள் புனே பயணம்

    நாளை நடக்கும் ராஜஸ்தான்- சென்னை அணி போட்டியை காண சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயில் மூலம் புனே செல்கின்றனர். சென்னை சென்ட்ரலில் இருந்து அவர்கள் இன்று காலை புனே புறப்பட்டனர்.

    சிஎஸ்கே ஜெர்சி

    சிஎஸ்கே ஜெர்சி

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மன்றம் இந்த சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை அணி மோதும் போட்டியை காண செல்லும் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்து சென்றனர்.

    English summary
    Chennai Super Kings fans travelling to Pune to watch Chennai super kings IPL match. Tamilnadu Cricket board and Chennai team fans has done the arrangements.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X