For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கணவருக்கு சிறுநீரக தானம் கொடுத்து சாதிக்க வைத்த மனைவி! ஜெயித்த காதல்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதல் கணவருக்கு சிறுநீரகத்தை தானம் அளித்ததன் மூலம் அவரை சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வைத்து சாதனை புரியச் செய்திருக்கிறார்.

சென்னையிலுள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் ஹரிகுமார்(28). இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

Chennai techie bags gold in World Transplant Games

சந்தோச வாழ்க்கையில் திளைத்த இத்தம்பதியினரின் வாழ்வில் சில மாதங்களிலேயே உடல் நலக்கோளாறு மூலம் பிரச்சினை ஏற்பட்டது.

ஹரிக்குமாரின் உடல் நலத்தில் சிக்கல் ஏற்படவே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தனர். அப்போது ஹரிகுமாரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது தெரியவந்தது.

ஆனாலும் நொறுங்கிப் போகாமல் போராடினர் இந்த தம்பதியர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது என முடிவாயிற்று. ஆனால் சிறுநீரகம் கிடைப்பது எளிதாக இல்லை. எனினும் மனைவி சரண்யாவே தனது காதல் கணவருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாகத் தந்து உயிரைக் காப்பாற்றினார்.

உடல் நலமடைந்த உடன் சர்வதேச அளவில் சாதனை புரிந்துள்ளார் ஹரிகுமார்.

தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஹரிகுமார் பங்கேற்றார்.

இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஹரிகுமார், வட்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதில் பெரிதும் மகிழ்ந்தது சரண்யாதான். நம் குடும்பத்தில் ஒருவர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் போது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சிறுநீரகம் தானம் அளிப்பதே சிறந்தது என தனது அனுபவத்தின் மூலம் கூறியுள்ளார் சரண்யா.

உண்மைக்காதல் ஜெயித்ததோடு சர்வதேச அளவில் தங்கப்பதக்கத்தையும் பெற வைத்துள்ளது.

English summary
City-based software engineer R Harikumar and his wife Saranya share more than just love. They share kidneys.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X