For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை வன்முறையால் பாதிக்கப்பட்டவரா?.. இந்த எண்களில் உடனே புகார் கொடுங்க

சென்னை வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் என்று நீதிபதி மஞ்சுளா அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திருவல்லிக்கேணி மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் நேற்று முன் தினம் நடைபெற்ற வன்முறை தாக்குதலில் போது அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்ய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ம் தேதி, மெரினா கடற்கரையையொட்டியுள்ள பகுதிகளில் பெரும் கலவரம் ஏற்பட்டது. அப்போது, திருவல்லிக்கேணியில் உள்ள நடுகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் வீடு வீடாகச் சென்று பெண்கள் மற்றும் ஆண்களை அடித்து உதைத்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு குழந்தைகளும் தப்பவில்லை. இதனால் பலருக்கு மண்டை உடைந்தது. பலருக்கு எலும்பு முறிந்தது. அவர்களை அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Chennai violence victims will complaint HRC

பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே மக்களை தாக்கியுள்ளதால், யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் நடுகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உடனே தமிழக மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் புகார் செய்யலாம் என்று நீதிபதி மஞ்சுளா அறிவித்துள்ளார்.

எனவே, தயவு செய்து பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், புகார் மனு எதுவாக இருந்தாலும் [email protected] இந்த மின்னஞ்சலுக்கு தயக்கம் எதுவும் இன்றி அனுப்பி வைக்கலாம். மேலும், தொடர்புக்கு..

அவரது அலுவலக தொலைபேசி எண் : 24951492
Phone : 91-44-2495 1484
Fax : 91-44-2495 1486

மிஸ் பண்ணாதீங்க.. புகார் கொடுங்க..

English summary
Judge Manjula has asked that the victims should complaint in Tamil Nadu Human Rights Commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X