For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் மீண்டும் ஒரு பிரளயம், பெரு வெள்ளத்திற்கு வாய்ப்பு.. பீதியை கிளப்பும் நித்யானந்த் ஜெயராமன்

ஆக்கிரமிப்புகளால் சென்னையில் மீண்டும் பெரு வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் மீண்டும் ஒரு பிரளயம். பீதியை கிளப்பும் நித்யானந்த் ஜெயராமன்- வீடியோ

    சென்னை: ஆக்கிரமிப்புகளால் சென்னையில் மீண்டும் பெரு வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஒரே இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை மாநகர் முழுவதும் வெள்ளக்காடாய் ஆனது.

    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் எல்லாம் வெள்ள நீர் புகுந்தது. பல இடங்களில் முதல் தளம் வரை கரைபுரண்டோடிய வெள்ளத்தால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.

    [சின்மயி - வைரமுத்து.. ஆண்டாள் விவகாரத்தின் எதிரொலியா.. அல்லது வேறு காரணமா??]

    அரசு நடவடிக்கை

    அரசு நடவடிக்கை

    இந்நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்டது போன்ற ஒரு பேரழிவை இனியும் அனுமதிக்கக்கூடாது என்ற ரீதியில் அரசு செயல்பட்டு வருகிறது.

    ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    இந்நிலையில் நீரியல் வல்லுனர்கள் மற்றும் மீனவ அமைப்புகள் சார்பில் 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பின்னர் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எண்ணூர் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் நிருபர்களை சந்தித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் ஆய்வின் முடிவில் கிடைத்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.

    500 ஏக்கர் ஆக்கிரமிப்பு

    500 ஏக்கர் ஆக்கிரமிப்பு

    எண்ணூர் துறைமுகம் அருகே 500 ஏக்கர் நீர்நிலை பகுதிகளை தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த ஆக்கிரமிப்புகளால், விரைவில் மீண்டும் பெரு வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

    மீண்டும் ஒரு பிரளயம்

    மீண்டும் ஒரு பிரளயம்

    சட்டத்தை மீறி மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு இந்த ஆக்கிரமிப்புகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் சென்னை மீண்டும் ஒரு பிரளயத்திற்கு ஆளாகம் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Environmentalist Nithyanand Jayaraman has said Chennai will face again a huge flood.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X