For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்கள் குரலுக்கு மதிப்பில்லை.. வரலாற்றில் முதல்முறை இப்படி ஒரு ஐபிஎல் போட்டி.. ஏன் இந்த பிடிவாதம்?

மக்களின் போராட்டத்தையும், எதிர்ப்பையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மக்கள் குரலுக்கு மதிப்பளிக்காமல் நடத்தப்படும் ஐபிஎல் போட்டி

    சென்னை: மக்களின் போராட்டத்தையும், எதிர்ப்பையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது.

    தமிழகம் முழுக்க காவிரி போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக ஐபிஎல் போட்டியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை அதிகமாகி உள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் நாளை போட்டி நடப்பது உறுதியாகி உள்ளது. ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் கட்டுப்பாடுகள் கூட விதிக்கப்பட்டு இருக்கிறது.

    இதற்கு முன்

    இதற்கு முன்

    இதற்கு முன்பே பல முறை கிரிக்கெட் போட்டிகளின் போது, மக்கள் போராட்டம் காரணமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அந்த வகையில் சில சமயங்களில் கிரிக்கெட் போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. மும்பை குண்டு வெடிப்பின் போது, இந்தியா - இங்கிலாந்து தொடரே ரத்து செய்யப்பட்டது.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    அதே போல் என்ன விஷயம் நடந்தாலும் கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்புதான் முக்கியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல நாட்டு வீரர்கள் விளையாடும் இந்த போட்டியில் அசம்பாவிதம் நடந்தால் அது தேசிய அவமானமாக மாறும். பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடக்காமல் இருப்பதற்கு கூட பாதுகாப்பு பிரச்சனைதான் காரணம்.

    இங்கே என்ன நடக்கிறது

    இங்கே என்ன நடக்கிறது

    ஆனால் இங்கே மக்கள் போராட்டத்தை கூட கவனத்தில் கொள்ளாமல் கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. 3000 போலீஸ்கள் இதில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 50,000 பேர் அமரக்கூடிய மைதானத்திற்கு 22 பேரை பாதுகாக்க வெறும் 3000 போலீஸ் போதுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வீரர்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கேள்வி உருவாகி உள்ளது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும், ஐபிஎல் நிர்வாகமும் இந்த போட்டியை கண்டிப்பாக சென்னையில் நடந்த வேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளது. ஏன் இந்த விஷயத்தில் இரண்டு பேரும் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார்கள் என்ற காரணம் புரியவில்லை. பிசிசிஐ அமைப்பில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் போது கூட இப்படி ஏன் நடக்கிறது என்ற கேள்வி உருவாகி உள்ளது.

    English summary
    Chennai will face Kolkatta tomorrow in Chepauk even after Cauvery protest threat. 3000 police will secure the ground.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X