For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.2000 கோடி வாடகை பாக்கி.. ஐபிஎல் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி பெற்றது எப்படி?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஐபிஎல் 2018, வீரர்கள், மைதானத்திற்கு உச்சகட்டப் பாதுகாப்பு- வீடியோ

    சென்னை: தமிழக அரசுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் சுமார் ரூ.2000 கோடி வாடகை பாக்கி வைத்துள்ள நிலையிலும், குத்தகை ஒப்பந்தம் காலாவதியாகிவிட்ட நிலையிலும் கூட அங்கே கிரிக்கெட் போட்டி நடத்த தமிழக அரசு எப்படி அனுமதி கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    1965ம் ஆண்டு, இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. முதல் 5 வருடங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.50,000 வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 2000மாவது ஆண்டு முதல் 2016வரை ஒப்பந்தம் மாற்றப்படவில்லை.

    Chepauk lease agreement for Chepauk expired in April 2015

    இதனிடையே கடந்த வருடம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கையில், சென்னை கிரிக்கெட் மைதானத்திற்காக ரூ2081 வாடகை பாக்கியுள்ளதாகவும், அதை தமிழக அரசு வசூலிக்க கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியது.

    இதுகுறித்து கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், மைதானத்தின் தற்போதைய சந்தை மதிப்பே ரூ.500 கோடிதான். இவ்வளவு அதிக வாடகை கொடுப்பதற்கு மைதானத்தை விலைக்கே வாங்கியிருக்க முடியும். வாடகை விவகாரத்தில் ஏதோ தவறு நடந்துள்ளது என பதிலளித்தனர்.

    இந்த நிலையில், ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத நிலையில், இன்றைய ஐபிஎல் போட்டிக்கு தமிழக அரசு எப்படி அனுமதி வழங்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. வாடகை விவகாரங்களை சரி செய்துவிட்டு, ஒப்பந்தத்தை புதுப்பித்துவிட்டுதான் அனுமதி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஐபிஎல் நடத்த அனுமதியளித்திருக்க கூடாது என்று, இந்த விவகாரம் பற்றி அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

    கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பெரிய 'தலைகள்தான்' தமிழக அரசை நடவடிக்கை எடுக்க விடாமல் முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது.

    English summary
    The Tamil Nadu Cricket Association and Madras Cricket Club owe the state Rs 2,081 crore -15 years of lease rent arrears for the M A Chidambaram stadium in Chepauk - Lease agreement for Chepauk expired in April 2015.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X