For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதுக்காகத்தான் காத்திருந்தோம்.. போராட்டத்தை வாபஸ் பெற்ற சேரன் அன்ட் கோ!

விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தங்களின் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிடுவதாக சேரன் அன்ட் கோ தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தங்களின் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிடுவதாக சேரன் அன்ட் கோ தெரிவித்துள்ளது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் விலக வேண்டும் என இயக்குநர் சேரன் போர்க்கொடி தூக்கினார்.

அவருக்கு ராதாரவி, ராதிகா, டி ராஜேந்தர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்றது.

சேரன் போராட்டம் வாபஸ்

சேரன் போராட்டம் வாபஸ்

இந்நிலையில் ஆர்கே நகரில் போட்டியிடுவதாக அறிவித்த நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக சேரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

எங்களுக்கு கிடைத்த வெற்றி

எங்களுக்கு கிடைத்த வெற்றி

விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர்கள் கூறினர். அப்போது பேசிய சேரன், விஷாலின் கடிதத்திற்கு நான் பதில் சொல்லப்போவதில்லை என தெரிவித்தார்.

விளம்பரத்திற்கு ஆசைப்படுவது யார்?

விளம்பரத்திற்கு ஆசைப்படுவது யார்?

அனுபவமின்மையும் அவசரமும்தான் விஷாலுக்கு வீழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் கூறினார். விளம்பரத்திற்கு ஆசைப்படுவது யார் என மக்களுக்கு தெரியும் என்றும் சேரன் கூறினார்.

விஷாலை யாருக்குமே தெரியாது

விஷாலை யாருக்குமே தெரியாது

பொதுக்குழுவில் தங்களின் கோரிக்கைகள் குறித்து தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் பேசுவோம் என்றும் அவர் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் தாங்கள் இருவரும் நடந்து சென்றால் விஷாலை யாருக்குமே தெரியாது என்றும் சேரன் கூறினார்.

English summary
Cheran and his supporters withdrawal their protest in producer council after Vishal nomination rejected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X