For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேரனின் 'கன்னா பின்னா' பேச்சு... கொந்தளிக்கும் தமிழ் உணர்வாளர்கள்!

By Shankar
Google Oneindia Tamil News

மேடைகளில் சற்றும் யோசிக்காமல் சினிமா பிரபலங்கள் பேசுவது, பெரும் சர்ச்சைகளைத் உண்டாக்கிவிடுகிறது.

லேட்டஸ்ட் கான்ட்ராவர்சி சேரன்.

புது இயக்குநர் தியா நடித்து இயக்கியிருக்கும் கன்னா பின்னா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திருட்டு விசிடிக்கு காரணமே இலங்கைத் தமிழர்கள்தான் என்று பேசிவிட்டுப் போக, இப்போது ஹாட் டாபிக் அதுதான்.

நேற்று கமலா திரையரங்கில் நடந்த இந்த விழாவில் பேசிய சேரன், தங்கர்பச்சான், ஜாக்குவார் தங்கம் மூவருமே திருட்டு டிவிடி, பைரஸிக்கு எதிராக பொங்கித் தீர்த்துவிட்டனர்.

குறிப்பாக சேரன்...

கையைக் காலை உடைப்பேன்

கையைக் காலை உடைப்பேன்

ஜாக்குவார் தங்கம் பேசும்போது, "திருட்டு டிவிடி, பைரஸில எவனாவது படம் பார்த்தா அவங்க காலை ஒடைப்பேன்," என ஆவேசமாக பேசி அமர்ந்தார். இது கொஞ்சம் சலசலப்பை உண்டாக்கியது.

சேரன்

சேரன்

அடுத்து பேசிய சேரன், "இந்த திருட்டு டிவிடி, பைரஸி எங்கேருந்து உருவாகுதுனு விசாரிச்சா இலங்கை தமிழர்கள்கிட்டேருந்துதான்னு தகவல் வருது. இலங்கை தமிழர்களுக்காக நாங்க எத்தனை போராட்டம் நடத்தியிருப்போம்? எவ்வளவு இழந்துருப்போம்? ஆனா அவங்க அதை கொஞ்சமாவது நினைச்சு

பார்த்துருந்தா இதை பண்ணுவாங்களா? இவங்களுக்காகவா போராடினோம்னு நினைச்சா எங்களுக்கே அருவருப்பா இருக்கு," என்று வேதனைப்பட்டார்.

சர்ச்சை

சர்ச்சை

இதை அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோதே சமூக வலைத் தளங்களில் எதிர்வினைகள் வர ஆரம்பித்ததுதான் ஆச்சர்யம். 'எவனோ ரெண்டு பேர் திருட்டு விசிடி அடிக்கறதுக்கு, பாவப்பட்ட ஈழத் தமிழர்கள் என்னய்யா செய்வார்கள்? சேரன் போன்றவர்கள் இப்படிப் பேசலாமா?' என கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். இது இன்றும் நாளையும் இன்னும் அதிக சலசலப்பை உண்டாக்கக் கூடும்.

பாக்யராஜ்

பாக்யராஜ்

இறுதியாக பேசிய பாக்யராஜ் இருவரையும் சமாதானப்படுத்தும் விதமாக பேசியது ஆறுதல். இதையெல்லாம் உணர்ந்தோ என்னமோ சேரன், ஜாக்குவார் தங்கம் பேசுவதற்கு முன்பே பேசிவிட்டு கிளம்பிவிட்டார் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு.

{video1}

English summary
Director Cheran's speech against Sri Lankan Tamil's created a stir among Tamil activists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X