For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்? சம்பத் விளக்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பான கேள்விக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் பதில் அளித்தார்.

தலைமை தேர்தல் ஆணையர், சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது சம்பத் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் அளித்த பதில்கள் வருமாறு:

Sampath

2009ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இருந்தே மின்னனு வாக்கு இந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இந்திரங்கள் குறித்து பலர் புகார் கூறி, பல்வேறு நிபுணர்கள் ஆய்வு செய்து தவறு நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர். தவறுகள் நடக்க முடியாத நல்ல திட்டம் தான் அது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் கணக்கை சமர்பித்து விட்டார்களா என்பது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தணிக்கை செய்து வருகின்றனர்.முறைப்படி தேர்தல் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. அது சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு. உரிய அனுமதி பெற்றுத் தான் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. டெல்லியில் கூட தேர்தலின்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டதால் அதை சரிசெய்த பின்னர், தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் தேதி மீண்டும் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Why section 144 imposed in Tamilnadu during parliament election, answered by Chief election commissioner Sampath in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X