For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் ஏன் செல்லும்? தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம்!

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் ஏன் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் ஏன் செல்லும்...நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம்- வீடியோ

    சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் ஏன் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

    Chief justice Indira Banerjee has clarified why 18 MLAs will be disqualified

    தமிழக அரசின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால் காலை முதலே எதிர்பார்ப்பு எகிறியது.

    இந்நிலையில் தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என கூறி தீர்ப்பளித்தார். 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.

    ஆனால் மற்றொரு நீதிபதியான சுந்தர் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இரு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்யப்படுவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

    இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வழங்கியது ஏன் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். சபாநாயகர் உத்தரவில் நீதித்துறை தலையிடக்கூடாது என்பதால் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்ததாக கூறியுள்ளார்.

    சபாநாயகர் உத்தரவை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் சபாநாயகரின் முடிவு என்பது உரிய காரணங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    English summary
    Chennai high court Chief justice Indira Banerjee has clarified why 18 MLAs will be disqualified.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X