For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடினார் ஜெ.. நா தழுதழுத்து கண்ணீர்விட்ட முதல்வர் எடப்பாடியார்!

கடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடியவர் ஜெயலலிதா எனக்கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேடையிலேயே கண்ணீர் விட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    கடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடினார் ஜெ...முதல்வர் உருக்கமான பேச்சு- வீடியோ

    சேலம்: கடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடியவர் ஜெயலலிதா எனக்கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேடையிலேயே கண்ணீர் விட்டார்.

    மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

    இதையடுத்து மேட்டூர் அணைப்பகுதியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது காவிரி நீரை பெறுவதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளை அவர் நினைவு கூர்ந்தார்.

    இறுதிமூச்சு வரை போராடினார்

    இறுதிமூச்சு வரை போராடினார்

    அப்போது அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கூட ஜெயலலிதா காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசித்தார் என்றார். தனது கடைசி மூச்சு வரை காவிரி நீரை பெற ஜெயலலிதா போராடினார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

    கண்ணீர் விட்ட முதல்வர்

    கண்ணீர் விட்ட முதல்வர்

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து மிகவும் உருக்கமாக பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவரது குரல் தழுதழுத்தது. கண்கள் கலங்கி கண்ணீர் விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

    120 அடியை எட்டும்

    120 அடியை எட்டும்

    காவிரி பிரச்னையில் சட்டப்போராட்டம் நடத்தி அதிமுக அரசு வென்று காட்டியுள்ளது என்றும், மேட்டூர் அணை விரைவில் 120 அடியை எட்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

    மேட்டூரில் நினைவு ஸ்தூபி

    மேட்டூரில் நினைவு ஸ்தூபி

    மேட்டூர் அணைப்பகுதியில் நினைவு ஸ்தூபியை கட்டவும், பூங்காவை மேம்படுத்தவும் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். காவிரி விவகாரத்தில் பெற்ற சட்டப்போராட்டத்தின் வெற்றிபெற்றதை வெளிப்படுத்தும் வகையில் நினைவு ஸ்தூபி அமைக்கப்படும்.

    வண்டல் மண் எடுக்கலாம்

    வண்டல் மண் எடுக்கலாம்

    கடைமடை வரை நீர் செல்லும் அளவுக்கு மேட்டூரிலிருந்து நீர் திறக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் நீர் குறையும் போதும் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

    English summary
    Chief Minister Edappadi Palanisami cries when he talks about Jayalalitha. CM Opens Mettur dam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X